காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு காங்கயத்தில் இரங்கல் கூட்டம்.

காங்கயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு காங்கயத்தில் வியாழக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

காங்கயம் பேருந்து நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர் பி.நதியா தலைமை வகித்தார். இதில் தலைவர் ஆர்.நல்லகண்ணு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் சிபிஐ கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் என்.செல்லமுத்து, திமுக காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் இரங்கல் உரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியில், சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி, சிபிஎம் முன்னாள் ஒன்றிய செயலாளர் திருவேங்கடசாமி, விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜான்நாக்ஸ், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி கவி, தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *