தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18 ஆவது ஆண்டு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவிற்கு ஆர். ஜெ.எம்.எஸ் குழுமத்தின் மேனஜிங் டைரக்டர் கே.ஆர்.செளந்தராஜன் தலைமை தாங்கினார் பள்ளி தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் பள்ளியின் டைரக்டர் கே.ஆர்.எஸ்.ஜெய்ஷவாணி முன்னிலை வகித்தனர் பள்ளியின் முதல்வர் ஆர் சுவாதிகா ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்தப் பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து தற்பொழுது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்களில் ஏராளமானோர் இதில் மூன்று பேரை இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உயரிய கௌரவம் அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது
இதனைத் தொடர்ந்து இந்த விழாவில் அவர்கள் பேசியது திருநெல்வேலி டாடா பவர் சோலார் நிறுவனத்தில் பணிபுரியும் எம். மோகன்சுந்தர் பேசும்போது நான் பணிபுரியும் நிறுவனத்தில் எனக்கு கீழ் என்னுடைய கட்டுப்பாட்டில் சுமார் 4000 பேர் பணிபுரிகிறார்கள்.
நான் இந்தப் பள்ளியில் படித்ததன் பயனாக ஆங்கிலம் சரளமாக பேசும் அளவிற்கு திறன் பெற்றேன் இதன்படி மாதந்தோறும் பள்ளியில் மாணவர்களின் கல்வி திறனறியும் நிகழ்வில் பங்கேற்று சிறந்த ஆங்கில மொழித் திறன் படைத்தவராக தேர்வு செய்யப்பட்டு பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளேன் இந்த கல்வி திறனே உயிர் கல்வி பயிலும் கல்லூரியில் படித்து பட்டம் பெற மிகவும் உதவியாக இருந்தது. நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார் டி. பூவன் ஜ.டி.கம்பெனியில் பணியாற்றி வரும் அவர் பேசும் போது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பள்ளியின் பருவ கால படிப்புகளான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் கல்விதான் அவர்கள் மிக உயர்ந்த படிப்பான ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போன்ற படிப்புகள் படித்தாலும் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணே அவர்களுக்கு உயர்ந்த தனியார் மற்றும் அரசு பணிகள் கிடைக்க உதவியாக இருக்கும் அந்த வகையில் ராம் ஜெயம் பள்ளியில் பயின்றே எனக்கு கல்லூரி கால படிப்புக்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது இந்தப் பள்ளியில் படித்தோம் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன் என்றார்
கே தருண் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் கே தருண் பிரணவ் பேசும்போது என்னுடைய பள்ளிக்கால பருவத்தில் படிப்பில் மிகுந்த ஹார்ட் ஒர்க் எடுத்து பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுத் தரும் பாடங்களை மிக கவனமாக கவனித்து படித்து நீட் தேர்வு எழுதி பாஸ் செய்து மெரிட்டில் மெடிக்கல் சீட் பெற்று இன்று மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவராக பயின்று வருகிறேன்
இந்த உயர்வுக்கு காரணம் இந்த பள்ளியில் படித்த கல்வியே எனக்கு ஊக்கம் அளித்தது. மேலும் பொதுவாக ஒரு பள்ளி ஆண்டு விழா என்றால் தற்பொழுது அரசு மற்றும் தனியார் துறையில் உயர்ந்த பதவிகள் இருப்பவர்களை அழைத்து விழா நடத்துவது வழக்கம் ஆனால் ராம் ஜெயம் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தப் பள்ளியில் பயின்று உயர்ந்த பதவிகளில் உள்ள முன்னாள் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உரிய கௌரவம் செய்து விழா நடத்தும் பள்ளி நிர்வாகத்தினருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். இதை யடுத்து பள்ளியில் தற்போது பயின்று வரும் மாணவர்களின் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன பள்ளியின் பிளஸ் ஒன் மாணவி மிதுளா ஸ்ரீ நன்றி உரையாற்றினார்
.