துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் 4ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
திருச்சி மாவட்டம் துறையூரில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மேலக்குன்னுப்பட்டியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு பேச்சாளர் காருண்யா மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூறினார்.
எம்எல்ஏ ஸ்டாலின்குமார்,மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன்,முன்னாள் சேர்மன் சரண்யா மோகன்தாஸ், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார்,இலக்கிய அணி கஸ்டம்ஸ் மகாலிங்கம்,மாவட்ட பிரதிநிதி நடுவலூர் செல்வகுமார்,ஒன்றிய பொருளாளர் நடுவலூர் மளிகை கடை ஜெயராமன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதுராபுரி பா.தமிழ் அழகன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்