காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் காங்கேயம் காளை சிலை, எம்எல்ஏ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
காங்கயம், பிப்.28: காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள காங்கேயம் காளை சிலை மற்றும் எம்எல்ஏ., அலுவலக புதிய கட்டடத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
காங்கயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மனிஷ் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர்கள் கே.இ.பிரகாஷ் (ஈரோடு), கே.சுப்பராயன் (திருப்பூர்), க.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி) திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற காங்கேயம் காளை சிலையை திறந்து வைத்தனர்.
பின்னர், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் பொதுப்பணிகள் குறித்த மூலதன செலவுகள் திட்டத்தின் கீழ் ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில், சட்டப்பேரவை உறுப்பினர் அறை, காத்திருப்போர் அறை, இ-சேவை மையம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் 1470 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள காங்கயம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலக புதிய கட்டடத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்து, சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம் திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், அனுராதா உள்பட துறைசார்ந்த அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.