கோவை பேரூர் ஆதீன மடத்தில் தமிழகத்தின் சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜே. முகமது ரஃபி அவர்களின் தன்னலமற்ற மக்கள் சேவையைப் பாராட்டி அவருக்கு மத நல்லிணக்க செம்மல் எனும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது..
பேரூர் ஆதீனம் 25-ஆம் பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் ஜே. முகமது ரஃபி ‘மத நல்லிணக்கச் செம்மல்’ என்ற விருதும் இதே போல எம்.எம்.ராமசாமிக்கு திருப்பணி செம்மல் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது…
இந்நிகழ்ச்சியில், பூமார்கெட் ஹைதர் அலி திப்புசுல்தான் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் பொருளாளர் வழக்கறிஞர் இஸ்மாயில் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹிர், டிஸ்கோ காஜா ஏர்டெல் அபுதாகிர் ,கோவை தல்ஹா,சந்திரசேகர், ராதா கிருஷ்ணன் , முகமது அலி,அசார் உட்பட சமூக ஆர்வலர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டு விருது பெற்ற முகம்மது ரபீக் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.