தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா உற்சாகமாக நடைபெற்றது.
சேந்தமங்கலம் :
தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் சேந்தமங்கலம் அசெம்பிளி யூத் பெடரேஷன் மாசி மக தேர்த்திருவிழாவை முன்னிட்டு சேந்தமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தமிழர் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவிற்கு பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
விழா மேடையில் நாட்டுப்புற கலைஞர்கள் பாரம்பரிய வேடங்களில் தோன்றி, தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களையும், கலைவடிவங்களையும் அரங்கேற்றினர். கரகாட்டம், மயிலாட்டம், வில்லுப்பாட்டு பெண்கள் குழு நடத்திய கோலாட்டம் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. குறிப்பாக பாரம்பரிய வேடமணிந்த கலைஞர்களின் நடிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
விழாவை முன்னிட்டு மேடை முழுவதும் தமிழர் பண்பாட்டை எடுத்துரைக்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. சமூக, பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படங்களும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டினர். தமிழர் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.