நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில்
வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது

நாமக்கல் அடுத்துள்ள வேட்டாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரியில் இன்று ஒரு நாள் வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். கணபதி, முதல்வர் டாக்டர் கே. பெரியசாமி, வேளாண்மை கல்லூரி முதல்வர் டாக்டர் N.O. கோபால், துணை முதல்வர் டாக்டர் எம். ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஒரு நாள் வேளாண்மை கண்காட்சியில்,
விவசாயிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ள அறிவியல்–தொழில் நுட்பங்களை பரவலாக்கும் வகையில்,
வேளாண்மை பட்டப் படிப்பு பயின்று வரும் இறுதியாண்டு மாணவ- மாணவிகள், 2 மாதங்கள் கிராமங்களில் தங்கி இருந்து கிராம அனுபவ வேளாண் பயிற்சிகளை பெற்று அதனடிப்படையில், 14 அரங்குகளை அமைத்தனர்.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், கபிலர்மலை உள்ளிட்ட 14 வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் பணிகள் குறித்து இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.

இதனை நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர். அந்தந்த வட்டாரங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பயிர் இரகங்கள், மண்ணின் தன்மை, அதற்கேற்ற முறையில் மன்வள அட்டையை பயன்படுத்தி சாகுபடி செய்தல் ஆகிவை குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மாணவ மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், உயர் விளைச்சல் விதைகள் மற்றும் புதிய பயிர் வகைகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், தயாரிப்புகள் மற்றும் விற்பனை மையங்கள் பற்றியும் கூறினர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த கண்காட்சியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *