நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுப்பட்டினம், மார்ச்.1
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 28 ஆம் தேதி அறிவியல் கண்காட்சி – 2026 நிகழ்ச்சி பள்ளி தாளாளர் அருட்சகோதரி வேளாங்கண்ணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பள்ளி முதல்வர் ஞானதங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.சகாதேவன் மற்றும் நெற்குணப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி கூடத்தை திறந்து வைத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.பி.சகாதேவன், ஆனந்தி ஆகியோர் மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு வாழ்த்தினர்.

குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *