ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி வெங்கடாசலம், குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், வருவாய்த்துறை மின்சாரத்துறை வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. மகளிர் உரிமைத் தொகைக்கு மட்டும் 1700 மனுக்களும், மற்ற துறையின் கீழ் 456 மனுக்களும் பொதுமக்கள் வழங்கினர்.
இதில் 60 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், செயல் அலுவலர் சதாசிவம், தாசில்தார் கவியரசு, அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.