ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு செல்ல, புதிய கான்கிரீட் சாலைக்கு பூமி பூஜை செய்து பணிகள் துவக்கப்பட்டது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும், ஈரோடு விற்பனை குழு நிதியிலிருந்து, பர்கூர் மலையில் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செல்ல கான்கிரிட் சாலை அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது.
பர்கூர் அருகேயுள்ள ஊசிமலையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்படும் சாலை பணியை, அந்தியூர் எம்எல்ஏ., வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.