தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் மறியல், கவனயீர்ப்பு மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட நகர பகுதிகளான கணபதி நகர் வள்ளலார் நகர் ராஜா நகர் ராகவேந்திரா நகர் தனலட்சுமி நகர் கிருஷ்ணா நகர் கே சி பி நகர் கோகுலம் காலனி உள்ளிட்ட பல்வேறு 15 நகர்கள் உட்பட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தராததை கண்டித்து 15-க்கும் மேற்பட்ட நகர்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திடீரென தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு நிலவியது மேலும் இவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி தாராபுரம் சாலை முதல் கொட்டாப்புலி பாளையம் வரை மற்றும் ராஜா நகர் சுபலட்சுமி நகர் வரையிலும் தார் சாலை அமைத்து தர வேண்டும் பயன்பாடு இல்லாமல் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் தெரு விளக்கு வசதி இல்லாத குறுக்கு வீதிகளில் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும் மண் சாலை வீதிகளாக உள்ள புதிர் வீதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் முறையாக குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு நகர் பகுதிகளில் புதிய தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்த தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசுவாரத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *