கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் ,மருதம் கல்வி அறக்கட்டளை, திருப்பனந்தாள் ,எஸ். கே .எஸ் .எஸ். கலை கல்லூரி ஆகிய இணைந்து நடத்திய பன்னாட்டு பல்துறை சார்ந்த கருத்தரங்கம் ரோட்டரி ஹாலில் நடந்தது.
நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ,எஸ். கே .எஸ் .எஸ். கலை கல்லூரி,முதல்வர் முனைவர் வேலு தலைமை தாங்கினார்.கல்லூரி செயலாளர் முனைவர் பாஸ்கரன், மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் ,இயக்குனர் சம்பத்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம்,செயலாளர் முனைவர் கணேசமூர்த்தி நோக்கவுனரயாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை ,ஆய்வு பிரிவு ,பேராசிரியர் பாலசுப்பிரமணி,சிங்கப்பூர் முனைவர் ஸ்ரீ லக்ஷ்மி ஆகியோர் பங்கேற்று பன்னாட்டு கருத்தரங்க நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள்
.
தொடர்ந்து கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வல்லுனர்கள்,கல்லூரி பேராசிரியர்கள்,பள்ளி தலைமையாசரியர், ஆசிரியர்கள் , , சமூகஆர்வலர்கள்,எழுத்தாளர்கள்,தொழில்அதிபர்கள், உள்ளிட்டோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
முன்னதாக பேராசிரியர் நாராயணன் வரவேற்றார். நிறைவில் பேராசிரியர் பார்த்திபன் நன்றி கூறினார்.
இந்த விழாவில் பேராசிரியர்கள் ,ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.