தமிழகத்தில் பிளஸ் டூ மாணவ மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 111 தேர்வு மையங்களில் 105 அரசு பள்ளிகளும், 40 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 84 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 229 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்தி 755 மாணவர்களும் 14 ஆயிரத்து 99 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 854 மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர்