எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மாசி மகம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது

இந்த ஆண்டு பக்தர்கள் காப்பு கட்டி ஏழு நாள் விரதம் இருந்த பக்தர்கள் தோப்பு குளக்கரையில் புனித நீராடினர். குளக்கரையிலிருந்து சக்தி கரகம், தீச்சட்டி புறப்பட்டதும் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் வீதிகள் தோறும் ஊர்வலமாக வந்தனர்

அப்போது வீடுகள் தோறும் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *