தஞ்சாவூர்

தவெக மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை. தவெக நிர்வாகிகள் பங்கேற்பு. இதுவரை உரிய அனுமதி வழங்கவில்லை என காவல்துறையினர் தகவல்.

தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் மார்ச் 4 ஆம் நிர்வாகிகளையும் – தொண்டர்களையும் சந்திக்க உள்ளார். சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,900 நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக காவல்துறை சார்பில் 32 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டை முன்னிட்டு மாநாடு நடைபெறும் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது. இதில் தவெக நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் காவல்துறை சார்பில் கேட்டபோது, இதுவரை எழுத்து பூர்வமாக உரிய அனுமதி வழங்கவில்லை, நாங்கள் கேட்டுள்ள நிபந்தனைகளுக்கு அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *