சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேரு நகர் வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளர் வி. லட்சுமி நாராயணசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார். தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்து, கல்லூரியின் கல்விசார் முன்னேற்றங்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளை விளக்கினார். மேலும் அவர் வரவேற்புரையும் வழங்கினார்.

செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன் மற்றும் இயக்குநர் மற்றும் செயலாளர் முனைவர் வி. சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, கல்லூரியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினர்.

சிறப்பு விருந்தினர்களாக FACT நிறுவனத்தின் தாளாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் சக்திமணி மற்றும் குருகுலம் இன்ஸ்டிடியூட் இயக்குநர் மயிலிறகு சுந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவர்கள் உரையில், மாணவர்கள் கல்வியுடன் தன்னம்பிக்கை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மூத்தவர்களை மதிக்கும் பண்பை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இவ்விழாவில் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கண்கவர் நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் விழாவை மேலும் சிறப்பித்தன. இறுதியில் இரவு உணவுடன் ஆண்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *