பாபநாசம் செய்தியாளர்
ஆர் தீனதயாளன்
பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி…
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றுமகம் பிறந்த நல்லூரில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்று கோவில் முன்பு உள்ள குளத்தில் மாசி மக தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு புனித நீராடினர் விழாவில் திருச்சிற்றப்பலம் தம்பிரான்சுவாமிகள் ,ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ரமேஷ் குருக்கள், கிராம மக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.