செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி இரும்புலியூரில் செயல்பட்டு வரும் மாநகர நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு தேர்வுக்கு தேவையான உபகரணங்களும் பள்ளியில் பயன்படுத்தக்கூடிய அறைகாலன்களும் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் யு வினோத் ஏற்பாட்டிலும் பகுதி கழகச் செயலாளர் எல்லா செழியன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பங்கேற்று மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.

மேலும் பள்ளிக்குத் தேவையான அறைகலன்கள் உட்பட சுமார் 2 லட்சம் மதிப்பீட்டிலான பொருட்களை அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் புருஷோத்தமன் வட்ட கழக செயலாளர் வெற்றிச்செல்வன் உட்பட மாவட்டக் கழக பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *