தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தாராபுரம் அடுத்த தாளக்கரையில் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்திற்கு பூமி பூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்துக்கு ஒரு பட்டு தாளக்கரை பகுதியில் அங்கே செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாப் அருகே முக்கிய பகுதியாக செயல்பட்டு வருவதால் அருகே உள்ள இடத்தில் புதிய பஸ் நிறுத்தத்தை சுமார் ஆறு லட்சம் செலவில் பூமி பூஜையை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பூஜையை முடித்தார்
அதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள சங்கரண்டாம்பாளையம் பகுதி நேர ரேஷன் கடையை துவைக்க வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கி சிறப்பித்தார் அப்பொழுது தமிழக முதல்வர் அனைவருக்கும் அனைத்து பொருள்களும் கிடைக்கும் வகையில் அங்கங்கே பகுதி நேர ரேஷன் கடையை துவக்கி வைத்துள்ளார் என்று தெரிவித்தார் இந்த விழாவில் குண்டடம் ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகர் அப்பகுதி தலைவர் கருணாகரன் ரங்கராம்பாளையம் வட்டக்காரர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.