புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டத்தில் அமைந்துள்ள ப-வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனிபால் கென்னடி அவர்களின் சொந்த முயற்சியால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து, கிரீன் வாரியர் அமைப்பின் மூலம் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யப்படாமல் இருந்த வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் மண் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதை சட்ட மன்ற உறுப்பினர் தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் விரைவாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை பார்வையிட்டார்.
அப்போது கிளைச் செயலாளர் காலப்பன், ராகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் சரஸ்வதி, டேவிட் ஆகியோர் உடனிருந்தனர். பணியாளர்கள் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணிகள் நிறைவடைந்ததன் மூலம் அப்பகுதியில் கொசு தொல்லை குறையும் என்றும், மழைக்காலத்தில் நீர் தேக்கம் ஏற்படும் பிரச்சினை தீரும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.