பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில், விவசாய மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவிற்கு முழு ஆதரவு நிறுவனத் தலைவர் டெல்டா மகேந்திரன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் பேட்டி..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே சூலமங்கலத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது..

இதில் நசுக்கப்பட்டு வரும் விவசாயிகள் உரிமைகளை அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். விளைநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைவரும் ஒன்று திரண்டு பாடுபட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிறுவனத் தலைவர் டெல்டா மகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..

விவசாயிகளின் பாதுகாப்பு கருதியும், விவசாயிகளுக்கு அனைத்து விதமான அங்கீகாரம் கிடைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு விவசாய மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதாகவும், தமிழகம் முழுவதும் அதிமுகவின் கூட்டணி வெற்றி பெற பாடுபட போவதாகவும் தெரிவித்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *