தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே தமிழகஅரசு முத்திரைகளை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் 1-கோடிக்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட வாலிபரிடம் தாராபுரம் போலீசார் தீவிர விசாரணை பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு .

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அறிவானந்தம் (27). அங்கன்வாடி பணியாளர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளை பெற்றுத் தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

புகாரின் பெயரில் தாராபுரம் போலீசார் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த அறிவானந்தத்தை தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் தாராபுரம் , அலங்கியம், பழனி வட்டம் கீரனூர், கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம், உடுமலைப்பேட்டையை அடுத்த கணியூர், கடத்தூர், கொழுமம், பொள்ளாச்சி மாவட்டம் வேட்டைக்காரன் புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் தமிழ்நாடு அரசு முத்திரை, அச்சிடப்பட்ட பணி ஆணை சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஏராளமான போலி ஆவணங்கள் தயார் செய்த பல ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்தது.

அறிவானந்தம் என்ற வாலிபர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை அடுத்து அறிவானந்தத்தின் தாராபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டோர் கூறுகையில் தற்பொழுது வரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 -கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு அறிவானந்தம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தனர்.

பணம் கொடுத்த அனைவரையும் திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்று அங்கு இருக்கும் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு அடையாள அட்டை பணி ஆணைகள் வாங்கி தருவது போல் நடித்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர் மூலம் 10-க்கும் மேற்பட்டோர் நபர்களிடம் அறிமுகம் செய்து தொடர்ச்சியாக பலரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஏமாற்றி தெரிய வந்துள்ளது.

அறிவானந்தத்தின் இல்லத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு நகைகள் வாங்கிய அட்டைப்பெட்டிகள்
10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதா என கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *