மதுரை தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வரும் 6 ம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்தது.
இது குறித்து சங்கத்தின் மதுரை மாவட்ட செயலர் சீனிவாசனின்
கோரிக்கை…..
தமிழக அரசின் விடுப்பு விதி கள் 9ஏ-இன்படி ஊதியமில்லா அசாதாரண விடுப்புகளுக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பை குறைக்க வேண்டும் என உள் ளது. இதன்படி, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களது இருப்பி லுள்ள ஈட்டிய விடுப்பு நாள் களை ஒப்படைப்பு செய்து பணம் பெற்று வருகின்றனர்.
ஆனால், தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு அதன் படி கணக்கிடாமல் விதிகளுக்கு முரணாக ஊதியம் பெறும் சாதாரண விடுப்புகளான மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, கருச் சிதைவு விடுப்பு உள்ளிட்ட விடுப்புகளுக்கு ஈட்டிய விடுப்பைக் குறைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கணக்கீடு செய்கின்றனர்.
இதனால்,தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் தங்களது ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெற முடியாத நிலை ஏற் படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் சுமார் ரூ.ஒரு லட்சம் வரை இழக்கின்றனர். இதைச் சரிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே, தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வருகிற 6 ம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.