வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று பிற்பகலில் நிகழ உள்ளது. இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். சந்திரனின் முழுமையாக சிவப்பு நிறம் மாலை 4.34 மணி முதல் மாலை 5.33 மணி வரை தோன்றும்.

பொதுவாக சூரியகிரகணம், சந்திரகிரகணம் நாட்களில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கோவில்களும் காலை நேரத்தில் நடை சாத்தப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் காலை நேர பூைஜகள் முடிந்த பின்னர் காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் கோவிலில் இருந்து வெளியேறினர். மாலையில் கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்த பின்பு இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *