தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சியின் முத்தூர் பிரிவில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிழற்குடையைக் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு கயல்விழி செல்வராஜ் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
புதிய நிழற்குடை அமைக்கப்பட்டதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் மழை, வெயில் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக காத்திருக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.