அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஆண்கள்,பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்பு

ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் அயத்துல்லாஹ் அலி காமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கோவை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,சுல்தான் அமீர் மற்றும் ஹாஜி இனாயத்துல்லாஹ் ஆகியோர் தலைமை தாங்கினார் சபீர் அலி முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுவோம்! உலக அமைதிக்காக குரல் கொடுப்போம்!” என்ற முழக்கத்துடன், பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு முன்னின்று நடத்தியது.

இதில் பேசிய கோவை சையத் ,மௌலவி அப்துல் ரஹ்மான் உலூமி உட்பட முக்கிய நிர்வாகிகள், “உலக வல்லாதிக்க சக்திகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இத்தகைய அராஜகச் செயல்கள் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒரு நாட்டின் தலைவரை இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் அழிப்பது கண்டிக்கத்தக்கது” என்று சாடினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் , ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்…

உலக நாடுகளின் அமைதியைச் சீர்குலைக்கும் இத்தகைய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *