திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் நடைபெற்ற 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ராஜதானிக்கோட்டையில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது . இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதில் சுற்று வட்டார பொதுமக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர் .

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக யாக சாலையில் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *