திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் குறிஞ்சி லயன்ஸ் கிளப் சார்பாக
ஏரி சாலை பகுதியில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாபெரும் மரத்தான் போட்டி மிகுந்த உற்சாகத்துடன்,சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.

இப்போட்டியினை நகர் மன்ற தலைவர் பா.செல்லத்துரை, துணை தலைவர். மாயகண்ணன் ஆகியோர் மாரத்தான் போட்டியினை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இதில் இளைஞர்களிடையே போதைப் பொருட்களுக்கு எதிரான தெளிவான விழிப்புணர்வையும்,சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் வகையிலும்,இந்த நிகழ்வு அனைவரின் மனங்களிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கியது.

இந்நிகழ்ச்சியில் குறிஞ்சி லயன்ஸ் கிளபின் தலைவர்.ஜான் தாமஸ் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், லயன்ஸ் கிளபின் உறுப்பினர்களுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு
“போதை வேண்டாம் – பசுமை வேண்டும்” என்ற சமூகச் செய்தியை கோசங்களுடன் வலுவாக எடுத்துச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *