கடலூர் மாவட்டம் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 1987-89 ல் பயின்ற 42 பயிற்சி ஆசிரியர்களில் மறைந்த மூன்று ஆசிரியர்களுக்கு முதல் நிகழ்வாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மீதம் 39 ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு நிறுவன முதல்வர் முனைவர் பழனி வழிகாட்டுதலில், துணை முதல்வர் அமுதா தலைமையிலும், பயிற்சி ஆசிரியர் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையில்நடைபெற்றது, இந்த ஒன்றுகூடல். நிகழ்ச்சியில் தங்களது கடந்த 37 ஆண்டுகளின் இனிமையான நிகழ்வுகளையும், ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து தங்களது, அன்பை வெளிப்படுத்தியமை மிக சிறப்பாக அமைந்தது.
அதுசமயம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் இந்த கல்வியண்டில் பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் பயிற்சி நிறுவனத்திற்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அனைவரும் அறுசுவையோடு உணவு உண்டு மிக மகிழ்வாக விடைபெற்றனர்.நிறுவன முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.