பெரம்பலூர் நாரணமங்கலம் ஆலந்தூர் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். நிலைய பயிற்சி அலுவலர் தெய்வ ராஜா,ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக மாநில அமைப்பாளர் ராஜன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ன, தன்னார்வலர் மார்கண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் மாநில தலைவரும் மாவட்ட நுகர்வோர் உறுப்பினருமான கதிரவன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *