இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் இணையரின் 4 வயது மகன் அப்டியல் ரயன் விக்டர் சோழன் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

மூன்று வயதிலேயே தனது தாயின் வழிகாட்டுதலுடன் வாசிக்கும் மற்றும் எழுதும் பழக்கத்தைத் தொடங்கிய இவருடைய எழுதுவதில் காணப்பட்ட அதிவேகத் திறமையால் உலகச் சாதனை முயற்சிக்குத் தயாராக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தைத் தொடர்புகொண்டு குழந்தையின் திறமையை உலக சாதனையாகப் பதிவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு இருதயபுரத்தில் அமைந்துள்ள இருதயநாதர் மண்டபத்தில், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சிவவரதகரன், மாவட்டச் செயலாளர் சோலையூரான்
ஆ.தனுஸ்கரன், மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர்.ஆ.தனுஷ்கரன் போன்றோர் முன்னிலையில் சாதனை முயற்சி நடைபெற்றது.

இம்முயற்சியின் போது, 3 மற்றும் 4 எழுத்துகள் கொண்ட 200 ஆங்கிலச் சொற்களை 8 நிமிடங்களில் எழுதி அப்டியல் ரயன் விக்டர் சாதனை படைத்தார்.
நடுவர்கள் குழுவின் ஆய்விற்குப் பின்னர், இம்முயற்சி உலகச் சாதனையாக அலுவலக ரீதியாகப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்தந்தை ரி.ஏ. யூலியன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக புனித மிக்கேல் கல்லூரியின் துணைத் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மெருஷன் ஹென்ரிக் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பா. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று சிறுவனை வாழ்த்தினர்.நிகழ்வை ஆசிரியர் சி. சுதேஸ்வரன் தொகுத்து வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *