​தருமபுரி, மார்ச் 3:

தருமபுரி மாவட்டம், பூதநத்தம் பஞ்சாயத்திற்குட்பட்ட நியூ இருளர் காலனி கிராமத்தில், டிவிஎஸ்- சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ், திறந்து வைத்தார்.

இருளர் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 68.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.வீடுகளைத் திறந்து வைத்துப் பயனாளிகளிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர்,பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் பங்கேற்றார்.

​நூல் வெளியீடு:

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் உள்ள 133 பழங்குடியினர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட சமூக முன்னேற்றப் பணிகள் குறித்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பான “முன்னேற்றப் பாதையில்” என்ற புத்தகத்தை ஆட்சியர் வெளியிட, அதனை அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஆட்சியர்ஆர். சதீஷ் பேசுகையில்,”அரசுத் துறைகளும் டிவிஎஸ்- சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையும் இணைந்து மேற்கொண்டு வரும் சமூக நலப்பணிகள், மாவட்ட மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு பெரும் பங்காற்றுகின்றன”
எனப் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங்,கல்வியியல் ஆலோசகர் டாக்டர் பழனிசாமிதிட்ட இயக்குநர் ரூபன்,கூட்டுறவு இணை-பதிவாளர்
மலர்விழி,மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) நர்மதா,கள இயக்குநர்கள் ஜெயபால், சீனிவாசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

​நிறைவாக, அறக்கட்டளை பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அரசு அலுவலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *