குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 10 மாணவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத் துறை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு பார்வை திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு கண் கண்ணாடி போட பரிந்துரை செய்து அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டு நடைபெற்ற முகாமில் குறைபாடுள்ள மாணவர்களுக்கும் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களை மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல், வட்டார கண் பரிசோதகர் ஜெயக்குமார், பள்ளி கண்ணொளி திட்ட ஆசிரியை ரமா தேவி ஆகியோர் பங்கேற்றார்கள்.