எஸ் செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி
சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் ராஜ குபேர சாய் பாபா மற்றும் 16 அடி உயரத்தில் புதிய கருங்கல் திருமேனியாக 51அடி உயரத்தில் விமானமும் அமைக்கப்பட்டு மகா திரிசூல வாராகி அம்மன் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் புதிதாக ராஜகுபேர சாய் பாபா கோயில் அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் சாய்பாபா விக்ரகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 16 அடி உயரத்தில் கருங்கல் திருமேனியாக மகா திரிசூலம் வராகி அம்மன் சிலை, 51 அடி உயரத்தில் விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் கடங்கள் மேள தாளம் முழங்க புறப்பட்டு ராஜகுபேர சாய்பாபா விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதே போல் மகா திரிசூல வராகி அம்மன் 51 அடி உயர விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.