கோவை மாநகராட்சி 80-வது வார்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை,கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கித் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவிற்குபகுதி பொறுப்பாளர் முருகேசன் 80-வது வார்டு செயலாளர் நா.தங்கவேலன் முன்னிலை வகித்து, நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்துச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
ஆண்டுதோறும் நடைபெறும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோவையில் மிகவும் பிரபலம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,80-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது.
பசிப்பிணி போக்கும் இப்பணியே மானுடத்தின் அடையாளம்”என்ற நோக்கில், சுகாதாரக் குழுத் தலைவரின் வழிகாட்டுதலின்படி வருடாவருடம் நடைபெறும் இந்த அன்னதான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில தீர்மானம் குழு இணை செயலாளர் நாச்சிமுத்து மற்றும் ராஜேஷ், வை.இளங்கோ, சக்கரவர்த்தி இளைஞர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் , பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.