உத்தமபாளையம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே உள்ள உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைப்பட்டியி ல் ஊராட்சி மன்ற அலுவலகம் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 7.30. லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது இந்த புதிய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி விழாவிற்கு தலைமை வகித்து புதிய ஊராட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் பி.டி. செல்ல பாண்டியன் உள்பட ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்