தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட டிடிகே நகர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் 3கோடி மதிப்பீட்டில் புதிய பூங்காவை காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் காமராஜ்,இந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.