திருவாரூர்., மார்ச். 04

தமிழகத்தில் நடைபெற்ற வரும் திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டக்குடி, கீரனூர், போழக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் தங்களை திமுக இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைந்தவர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் இருவர்ண வேட்டி துண்டு சேலைகளை வழங்கி வரவேற்றார்‌.

இந்த நிகழ்ச்சியில் நன்னிலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கேப்டன் செல்வராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் கார்த்திக், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலமுத்து உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *