சீர்காழி அருகே மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தல்.மீன் இறங்குதளம் மேம்படுத்துதல் மற்றும் முகத்துவாரம் தூர்வாரும் பணிகளுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி திறந்து வைத்த முதல்வர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையாரில் மீன் பிடி துறைமுகம் அமைந்துள்ளது. துறைமுகத்தை மேம்படுத்த மீன்வளம் மற்றும் மின்வளத் துறை சார்பில் ரூபாய் 26.26 கோடி மதிப்பீட்டில் வலை பின்னும் கூடம்,மீன் பதப்படுத்தும் கூடம் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் முடிவடைந்து இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இதே போல் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கூடுதல் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *