மூத்த தம்பதியை தாக்கி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சென்னையில் கைது.
தாராபுரம் அருகே மூத்த தம்பதியை தாக்கி நகையை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் மாந்தியாபுரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி வயது 61, பாலாமணி 56 தம்பதிரை கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கி நகை கொள்ளை அடித்த வழக்கில் ஏற்கனவே நகை கடை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக இருந்தார்
இந்நிலையில் தாராபுரம் தச்சன் புதூர் டாஸ்மார்க் கடை அருகே பதுங்கியிருந்த குற்றவாளி இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை பேரையூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி வயது 24 என்பவரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்து பாதுகாப்பாக தாராபுரம் அழைத்து வந்தனர்.
தாராபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு பிறகு மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.