கோவை மாவட்டம் வால்பாறையில் சமுக நலம் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வால்பாறை வட்டாரத்தில் உள்ள சுமார் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ரா. வீணா வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை நகரச் செயலாளர் குட்டி என்ற ஆ. சுதாகர் சமுதாய வளைகாப்பு விழாப் பேருரையாற்றினார்


வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம் முன்னிலையில் நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட இவ்விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.ஏ.ஐ. நெல்சன், வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சுமணன், வட்டார ஒருங்கிணைப்பாளர் அனிஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு சீர்வரிசைகள் வழங்கப்பட்டதோடு, எடை மற்றும் உயரம் உள்ளிட்ட மருத்துவக் கணக்கெடுப்புகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர் நன்றி கூறினார் இவ்விழாவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர், அங்கன்வாடிப் பணியாளர்கள் , மருத்துவப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *