திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்து நதிகள் செய்பவன் கவிதை நூலை வெளியிட திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். கல்வியாளர் ஜெயலட்சுமி நூல் ஆய்வுரையாற்றினார்.
கவிஞர் கவிசெல்வா , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிழக்கு கிளை தலைவர் முகம்மது அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நதிகள் செய்பவன் கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் முபாரக் ஏற்புரையாற்றினார்.
முன்னதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் விஜயகுமார் வரவேற்க, நிறைவாக இனிய நந்தவனம் மாத இதழ் மக்கள் தொடர்பாளர் தனபால் நன்றி உரையாற்றினார். இனிய நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்