கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஆலோசனைக்கு இணங்க அதிமுகவின் மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் மேற்கு பகுதி வார்டு நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேர்தல் பொறுப்பாளர் ராஜ்குமார், தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது ஆகியோர் கலந்து கொண்டனர் அதிமுக நகர மேற்கு கழக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் வால்பாறை வீ.அமீது பேசும் போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவின் தலைமையிலான எடப்பாடியாரின் ஆட்சி மலர அனைவரும் பாடுபடவேண்டும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள வாக்காளர்களிடமும் விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி தொடர்ந்து பாடுபடவேண்டும் என்றும் கடமைக்காக பணியாற்றத் கூடாது கட்சி வேஷ்டி அணிந்து முழுமனதோடு கழகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் நகர அவைத்தலைவர் சுடர்பாலு, பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நரசப்பன், மாணவரணி நகரச்செயலாளர் லோகேஷ், பேரவை நகர இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், முத்து முடி பாலன், பிரமேஸ், சாய் கிருஷ்ணன், தொழிற்சங்க துணைச்செயலாளர் ஜான் பீட்டர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தங்கச்சங்கிலி பரிசு அறிவிப்பால் அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் முன்னதாக பேரவை நகரச்செயலாளர் செந்தில் பாலு அனைவரையும் வரவேற்று பேசினார் கூட்டமுடிவில் 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன் நன்றி கூறினார்