வெள்ளி விழா லோகோ மற்றும் 25 வருட வெற்றி பயண ஓளிப்படம் வெளியீடு

கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்,சில்வர் ஜூபிளி விழா பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது..

பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினராக மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு பேசினார்…

அப்போது பேசிய அவர் பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள் கல்வி, சமூக நலன் மற்றும் கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பைப் பாராட்டினார் மேலும், பிஎஸ்ஜி பார்மசி கல்லூரியின் வசதிகள் மற்றும் கல்வித் திட்டங்கள் தனியார் நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களில் பயலும் மாணவர்கள் அறிவும் நடைமுறை அனுபவமும் இணைந்து தொழில்முறை உலகிற்கு தயாராவதாக அவர் தெரிவித்தார்..

முன்னதாக பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் ஜி.ஆர். கார்த்திகேயன்,பேசுகையில், வெள்ளி விழா நூற்றாண்டை நெருங்கி வரும் பி.எஸ்.ஜி.கல்லூரி, நிலையான பாரம்பரியத்திற்கான சான்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்..

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் சில்வர் ஜூபிளி லோகோ மற்றும் 25 ஆண்டு கால பயணத்தை கூறும் ஒளிப்படம் வெளியிடப்பட்டது தொடர்ந்து லோகோவை வடிவமைத்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *