புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழா தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் தேசிய துணைத்தலைவர் தந்தைபிரியன் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தீன் என்கிற அஷ்ரப்தீன் தலைமையில் மாநில பொருளாளர் கமல் என்கிற பரணி சந்திரன் லெபஸ் முன்னிலையில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளரும் , மற்றும் ஆல் இந்தியா பிரஸ் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் கௌரவத் தலைவருமான டாக்டர் சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் பெயர் பலகை திறந்து வைத்தார்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களை AIPMPA- PRO ஹரிதாஸ் வரவேற்றார் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் அஷ்ரப் தீன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்