துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தகவல் இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினியம் லோட்டஸ் மெடோஸ் என்னும் தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கிய பிரீமிய திட்டம் கோவை சரவணம்பட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

அதிக இடவசதி மற்றும் பணத்திற்கான முழு மதிப்பு அபார்ட்மென்ட் விலையில் வில்லாக்கள். மேலும் 1380 சதுரடியில் 2 படுக்கையறைகளை கொண்ட விசாலமான ஃபிளாட்டுகள் குறைந்த விலையில் வழங்கப்படுவதால் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன..

இது குறித்து இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில்,கோவை சரவணம்பட்டியில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் CHIL IT பார்க் அருகில் அமைந்துள்ளது இன்ஃபினியம் லோட்டஸ் மெடோஸ் கேட்டட் கம்யூனிட்டி.

இன்ஃபினியம் லோட்டஸ் மெடோஸ் கேட்டட் கம்யூனிட்டியில் 2,247 சதுர அடி முதல் 3,363 சதுர அடி வரையிலான 39 பிரீமியம் 3 மற்றும் 4 படுக்கையறைகளை கொண்ட வில்லாக்கள் அமைந்துள்ளன.

இது போதுமான இடவசதி, தனி சுதந்திரம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையினை வழங்குகிறது. மேலும், 1,380 சதுர அடி முதல் 2,431 சதுர அடி வரையிலான 65 விசாலமான 2 மற்றும் 3 படுக்கையறைகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்…

இந்த புராஜெக்ட் ஆனது தொழில் வல்லுநர்கள், வளர்ந்து வரும் குடும்பங்கள் மற்றும் அதிக இடத்தையும் வசதிகளையும் தேடும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *