திராவிட மாடல் ஆட்சி தொடர திமுக பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். குற்றாலத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார்

தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக பாக முகவர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், துணை செயலாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி, தமிழ்செல்வன், கென்னடி, பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளரும், தென் மண்டல திமுக பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். உலகமே மெச்சக்கூடிய வகையில் நமது திராவிட மாடல் ஆட்சி இருந்து வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும். தமிழகத்தை பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். இதில் பாக முகவர்களின் பணி மிக முக்கியமானது.

பீகாரில் நடைபெற்றது போல் போலியான வாக்காளர் பெயர்களை சேர்க்கவும் நமது வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் முயற்சிகள் நடைபெறலாம். எனவே நமது பாக முகவர்கள் கவனமுடன் செயல் பட்டு வாக்காளர் பட்டியல்களை பாதுகாத்திட வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் உள்ள வாக்காளர்களின் முழு விவரங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.நமக்கு விழ வேண்டிய ஓட்டுகளை நாம் பெற்றாக வேண்டும். நமது வாக்காளர்களை அழைத்துச் சென்று வாக்களிக்க செய்ய வேண்டியது நமது கடமை ஆகும். மீண்டும் தமிழகத்தில் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி தொடர அனைவரும் ஒன்று பட்டு அயராது பாடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு தளபதி விருதினையும், புதிய இளம் மற்றும் மாநில பேச்சாளர் களுக்கு தளபதி விருது மற்றும் பொற்கிழியையும் கனிமொழி எம்.பி. வழங்கி பாராட்டினார்.

இந்தக் கூட்டத்தில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் , சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கலைகதிவரன், கணேஷ்குமார் ஆதித்தன், நௌசாத், தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை, சேக்தாவூது, ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ் எம் ரஹீம், சீவநல்லூர் கோ.சாமித்துரை, ரவிச்சந்திரன், ஏ.பி.அருள், தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி ஆர்.எம். அழகு சுந்தரம், வல்லம் எம்.திவான்ஒலி, செங்கோட்டை ஆ.ரவிசங்கர், கீழப்பாவூர் கே.சீனித்துரை, பொன் செல்வன், ஜெ.கே.ரமேஷ், சேக்முகம்மது, சிவன்பாண்டி யன், கடையம் ஜெயக்குமார், மகேஸ் மாயவன், குமார், ஆலங்குளம் எம்பிஎம். அன்பழகன், செல்லத்துரை, ஜெயா, மணிகண்டன், சமுத்திரபாண்டி, மணிகண்டன், திமுக நகர செயலாளர்கள் தென்காசி ஆர்.சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், சுரண்டை ஆ.கணேசன், பேரூர் திமுக செயலாளர்கள் மேலகரம் சுடலை குற்றாலம் குட்டி, இலஞ்சி, மு.முத்தையா, பண்பொழி கரிசல் அ.இராஜராஜன், சுந்தரபாண்டியபுரம்
வே. பண்டாரம், புதூர் கோபால் கீழப்பாவூர் ஜெகதீசன், நெல்சன், அழகேசன், வெள்ளத்துரை, தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக் அப்துல்லா, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், சே.தங்கப்பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *