திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
கரூரில் வரும் செப்டம்பர் 17 தேதி திமுக முப்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திளாக பங்கேற்க வேண்டும் என குடவாசல் அருகே திமுக சார்பில் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பாகநிலை முகவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே புதுக்குடி தனியார் அரங்கில் திமுக சார்பில் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பாகநிலை முகவர் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக வரும் செப்டம்பர் 15ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் 17 ந்தேதி பெரியார் பிறந்த நாளில் கழக கொடி ஏற்றி அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் மேலும் மண் மொழி மானம் காப்பதற்கான உறுதிமொழி ஏற்க வேண்டும் கரூரில் நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திளாக பங்கேற்க வேண்டும் எனவும் புதிய வாக்காளர் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய நகர பேருர் சார்பணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.