திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல விடையல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு நிதிகளின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வலங்கைமான் ஒன்றியம், மேல விடையல் ஊராட்சியில் குப்பசமுத்திரம் கலைஞர் நகரில் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நான்கு பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளையும், கீழ விடையல் ஊராட்சி மாதா கோயில் தெருவில் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மூன்று பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உரிய அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். இவ் ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி, ஒன்றிய பொறியாளர் சுகந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலகம் சரவணன், பணி மேற்பார்வையாளர்கள் பிரபாகரன், முருகையன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சுரேந்திரன், கோபிநாத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.