உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம், தேரோட்டம் ஏப்ரல் 27 ந் தேதி நடைபெற உள்ளது

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்களும் வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தும் கட்டிடக்கலையை வியந்தும் பார்த்து வருகின்றனர்,

இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும், அதே போல் இந்தாண்டு வரும் ஏப்ரல் மாதம் 13 தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 27 ந் தேதி தேரோட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது, இதனை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பந்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது,


பந்தகாலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்ட அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *